அதிகாரம் / Chapter 71

திருக்குறள் 702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.

பரிமேலழகர்

அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை தெய்வத்தொடு ஒப்பக்கொளல்-மகனேயாயினும், தெய்வத்தொடு ஒப்ப நன்கு மதிக்க. விளக்கம் (உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடு ஒப்ப' என்றார்.)

English explanation

Undoubting, who the minds of men can scan,As deity regard that gifted man

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).