அதிகாரம் / Chapter 84

திருக்குறள் 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.

பரிமேலழகர்

நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாட வேண்டுமவற்றை நாடாமையும்; நார்இன்மை - யாவர் மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். விளக்கம் (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுமவை - கருமங்களில் செய்வன தவிர்வன முறிதல் : கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)

English explanation

Ashamed of nothing, searching nothing out, of loveless heart,Nought cherishing, 'tis thus the fool will play his part

Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.