அதிகாரம் / Chapter 84

திருக்குறள் 832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.

பரிமேலழகர்

பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். விளக்கம் (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

English explanation

'Mid follies chiefest folly is to fix your loveOn deeds which to your station unbefitting prove

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.