அதிகாரம் / Chapter 64

திருக்குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.

பரிமேலழகர்

செயற்கை அறிந்தக் கடைத்தும்-நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. விளக்கம் ('கடைத்தும்' என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க; செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)

English explanation

Though knowing all that books can teach, 'tis truest tactTo follow common sense of men in act

Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.