அதிகாரம் / Chapter 106

திருக்குறள் 1055

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.

பரிமேலழகர்

கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம் பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே; பிறிதொன்றான் அன்று. விளக்கம் (அவர் இல்லையாயின். மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)

English explanation

Because on earth the men exist, who never say them nay,Men bear to stand before their eyes for help to pray

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.