அதிகாரம் / Chapter 39

திருக்குறள் 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

பரிமேலழகர்

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செய்வான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். விளக்கம் (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)

English explanation

Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).