அதிகாரம் / Chapter 39

திருக்குறள் 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

பரிமேலழகர்

சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடைவேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது; கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். விளக்கம் ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, 'இடிக்குந் துணையாயினார்' என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை: விசேட உணர்வினனாதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)

English explanation

The king of worth, who can words bitter to his ear endure,Beneath the shadow of his power the world abides secure

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.