அதிகாரம் / Chapter 14
திருக்குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.
பரிமேலழகர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான்-ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்-அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். விளக்கம் (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)
English explanation
'Decorum' gives especial excellence; with greater care'Decorum' should men guard than life, which all men share
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.