அதிகாரம் / Chapter 14

திருக்குறள் 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

பரிமேலழகர்

ஒழுக்கம் ஓம்பிப் பிரிந்து காக்க-ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்த ஓம்பித் தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, 'இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாது?' என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். விளக்கம் ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்து சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

Searching, duly watching, learning, 'decorum' still we find;Man's only aid; toiling, guard thou this with watchful mind

Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.