அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 830

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

பரிமேலழகர்

பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. விளக்கம் (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வௌ¢ப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, 'ஆமளவெல்லாம் நீக்குக' என்பது பெற்றாம்.)

English explanation

When time shall come that foes as friends appear,Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).