அதிகாரம் / Chapter 100

திருக்குறள் 996

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.

பரிமேலழகர்

பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். விளக்கம் ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பது பட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும், அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

English explanation

The world abides; for 'worthy' men its weight sustainWere it not so, 'twould fall to dust again

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.