அதிகாரம் / Chapter 40
திருக்குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.
பரிமேலழகர்
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னோடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம்; யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி? விளக்கம் (உயிரோடு சேறலின், 'சாம் துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை; அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)
English explanation
The learned make each land their own, in every city find a home;Who, till they die; learn nought, along what weary ways they roam
How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?