அதிகாரம் / Chapter 40
திருக்குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
பரிமேலழகர்
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. விளக்கம் (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை மேலே கூறப்பட்டது (குறள் 62.) உதவுதல் - நன்னெறிக் கண் உய்த்தல்.)
English explanation
The man who store of learning gains,In one, through seven worlds, bliss attains
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.