அதிகாரம் / Chapter 56
திருக்குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.
பரிமேலழகர்
நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். விளக்கம் (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
Who makes no daily search for wrongs, nor justly rules, that kingDoth day by day his realm to ruin bring
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.