அதிகாரம் / Chapter 56

திருக்குறள் 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

பரிமேலழகர்

வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். விளக்கம் ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.)

English explanation

As 'Give' the robber cries with lance uplift,So kings with sceptred hand implore a gift

The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".