அதிகாரம் / Chapter 56

திருக்குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.

பரிமேலழகர்

கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். விளக்கம் (அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. 'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.)

English explanation

Than one who plies the murderer's trade, more cruel is the kingWho all injustice works, his subjects harassing

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.