அதிகாரம் / Chapter 56
திருக்குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர்
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். விளக்கம் ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
English explanation
Whose rod from right deflects, who counsel doth refuse,At once his wealth and people utterly shall lose
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.