அதிகாரம் / Chapter 56

திருக்குறள் 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

பரிமேலழகர்

மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. விளக்கம் (இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

English explanation

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.