அதிகாரம் / Chapter 37

திருக்குறள் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

பரிமேலழகர்

அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். விளக்கம் (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இப்பொழுது அவாவால் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)

English explanation

Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.