அதிகாரம் / Chapter 21

திருக்குறள் 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அஇஉறைந் தற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

பரிமேலழகர்

தீயவை செய்தார் கெடுதல்-பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று-ஒருவன் நிழல் நொடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கி தன்மைத்து. விளக்கம் (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு 'அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று' என்னாது, 'வீயாது அடி உறைந்தற்று,' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார். ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

English explanation

Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.