அதிகாரம் / Chapter 50
திருக்குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.
பரிமேலழகர்
இற்றாரும் ஆற்றி அடுப -வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்; இடம் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். விளக்கம் ['வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல், இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.]
English explanation
E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.