அதிகாரம் / Chapter 48
திருக்குறள் 478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
பரிமேலழகர்
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்; போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறி அளவு அதனின் பெருகாதாயின். விளக்கம் ['இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.]
English explanation
Incomings may be scant; but yet, no failure there,If in expenditure you rightly learn to spare
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.