அதிகாரம் / Chapter 48

திருக்குறள் 477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர்

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருகாப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம். விளக்கம் [ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் ''வகுத்தலும் வல்லதரசு'' (குறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி, நின்ற ஒன்றனை ஈதல், பிறரும், ''வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்'' (திரிகடுகம், 21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பில்லாத அதனை தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.]

English explanation

With knowledge of the measure due, as virtue bids you give!That is the way to guard your wealth, and seemly live

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.