அதிகாரம் / Chapter 118

திருக்குறள் 1180

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

பரிமேலழகர்

1180 'காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்போலும் அறைபறையாகிய கண்ணினையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது. விளக்கம் ('மறை' என்றது, ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின், 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

English explanation

It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.