அதிகாரம் / Chapter 88
திருக்குறள் 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.
பரிமேலழகர்
முள் மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கை கொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். விளக்கம் ('களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக; அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும்' என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல். இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)
English explanation
Destroy the thorn, while tender point can work thee no offence;Matured by time, 'twill pierce the hand that plucks it thence
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.