அதிகாரம் / Chapter 105

திருக்குறள் 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.

பரிமேலழகர்

இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. விளக்கம் (இன்னாதது - துன்பஞ் செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று.)

English explanation

You ask what sharper pain than poverty is known;Nothing pains more than poverty, save poverty alone

There is nothing that afflicts (one) like poverty.