அதிகாரம் / Chapter 17

திருக்குறள் 165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

பரிமேலழகர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். விளக்கம் ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

English explanation

Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.