அதிகாரம் / Chapter 17
திருக்குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
பரிமேலழகர்
அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. விளக்கம் (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
English explanation
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.