அதிகாரம் / Chapter 78
திருக்குறள் 775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
பரிமேலழகர்
விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். விளக்கம் (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)
English explanation
To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear
Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?