அதிகாரம் / Chapter 99
திருக்குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.
பரிமேலழகர்
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம் திரியார். விளக்கம் (சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். "பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ" (புறநா. 330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)
English explanation
Call them of perfect virtue's sea the shore,Who, though the fates should fail, fail not for evermore
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.