அதிகாரம் / Chapter 57

திருக்குறள் 565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

பரிமேலழகர்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. விளக்கம் (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதுபற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)

English explanation

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.