அதிகாரம் / Chapter 57
திருக்குறள் 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும். இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.
பரிமேலழகர்
கடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். விளக்கம் ("வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு" எனப்பட்ட விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றாயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
English explanation
The tyrant, harsh in speach and hard of eye,His ample joy, swift fading, soon shall die
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.