அதிகாரம் / Chapter 57

திருக்குறள் 567

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம். இது வலியைக் கெடுக்கும் என்றது.

பரிமேலழகர்

கடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம். விளக்கம் (கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.)

English explanation

Harsh words and punishments severe beyond the right,Are file that wears away the monarch's conquering might

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).