அதிகாரம் / Chapter 120

திருக்குறள் 1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.

பரிமேலழகர்

இதுவும் அது. நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதல் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்துயாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம். விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்,' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.)

English explanation

Though he my heart desires no grace accords to me,Yet every accent of his voice is melody

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.