அதிகாரம் / Chapter 81

திருக்குறள் 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.

பரிமேலழகர்

எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். விளக்கம் (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.

English explanation

Who stand within the bounds quit not, though loss impends,Association with the old familiar friends

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.