அதிகாரம் / Chapter 130
திருக்குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.
பரிமேலழகர்
இதுவும் அது. தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? விளக்கம் ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது,' என்பதாம்.)
English explanation
A trifle is unfriendliness by aliens shown,When our own heart itself is not our own
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.