அதிகாரம் / Chapter 64

திருக்குறள் 634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர்

தெரிதலும்-ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும்-அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும், ஒரு தலையாச் சொல்லலும்-சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும், வல்லது அமைச்சு வல்லவனே அமைச்சனாவான். விளக்கம் (தெரிதல், செயன் மேலதாயிற்று, வருகின்றது அதுவாகலின்.)

English explanation

A minister has power to see the methods help afford,To ponder long, then utter calm conclusive word

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).