அதிகாரம் / Chapter 22

திருக்குறள் 212

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

பரிமேலழகர்

தக்கார்க்கு தகுதி உடையார்க்கு ஆயின்; தான் ஆற்றித் தந்த பொருள் எல்‘ம்-முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்; வேளாண்மை செய்தற் பொருட்டு-ஒப்புரவு செய்தற் பயத்தவாம். விளக்கம் (பிறர்க்கு உதவதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

English explanation

The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.