அதிகாரம் / Chapter 119
திருக்குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
பரிமேலழகர்
ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும்; பசப்பு இப் பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என்மேனிமேல் இவர் தந்து ஊரும் - என்மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. விளக்கம் (''குருதி கெப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' (சீவக விமலை. 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 'அஃது உரிமை பற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.)
English explanation
'He gave': this sickly hue thus proudly speaks,Then climbs, and all my frame its chariot makes
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.