அதிகாரம் / Chapter 53
திருக்குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
பரிமேலழகர்
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார்கண்ணே உள-சுற்றத்தார் மாட்டே உள ஆவன. விளக்கம் [சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப் படாமை விளக்கி நின்றது. பழைமை: பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.]
English explanation
When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).