அதிகாரம் / Chapter 52
திருக்குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
பரிமேலழகர்
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை) நாள்தோறும் ஆராய்க. விளக்கம் [அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.]
English explanation
Let king search out his servants' deeds each day;When these do right, the world goes rightly on its way
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.