அதிகாரம் / Chapter 54
திருக்குறள் 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
பரிமேலழகர்
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து-அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க, விளக்கம் [காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும், கூறினார். கெட்டாரை உள்ளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து 'எண்ணுக' என்று பாடம் ஓதுவாரும் உளர்.]
English explanation
Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.