அதிகாரம் / Chapter 87
திருக்குறள் 865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
பரிமேலழகர்
வழி நோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றாற்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. விளக்கம் (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும், தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும், இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)
English explanation
No way of right he scans, no precepts bind, no crimes affright,No grace of good he owns; such man's his foes' delight
(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.