அதிகாரம் / Chapter 99

திருக்குறள் 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.

பரிமேலழகர்

நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். விளக்கம் (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)

English explanation

The type of 'penitence' is virtuous good that nothing slays;To speak no ill of other men is perfect virtue's praise

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.