அதிகாரம் / Chapter 93

திருக்குறள் 925

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

பரிமேலழகர்

பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்-ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து-அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. விளக்கம் (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் "பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று"

English explanation

With gift of goods who self-oblivion buys,Is ignorant of all that man should prize

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).