அதிகாரம் / Chapter 9

திருக்குறள் 86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்வருந்து வானத் தவர்க்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

பரிமேலழகர்

செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். விளக்கம் ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)

English explanation

The guest arrived he tends, the coming guest expects to see;To those in heavenly homes that dwell a welcome guest is he

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.