அதிகாரம் / Chapter 76
திருக்குறள் 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக. இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.
பரிமேலழகர்
விளக்கம் (அவற்றொடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர் போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)
English explanation
Wealth gained by loss of love and grace,Let man cast off from his embrace
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.