அதிகாரம் / Chapter 101
திருக்குறள் 1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.
பரிமேலழகர்
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? விளக்கம் (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ'' என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
English explanation
Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?