அதிகாரம் / Chapter 24

திருக்குறள் 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

பரிமேலழகர்

நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. விளக்கம் (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)

English explanation

If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.