அதிகாரம் / Chapter 130

திருக்குறள் 1292

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச்சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? விளக்கம் ('அவரை' என்பது வேற்றுமை மயக்கம். 'பழங்கண்ணோட்டம் பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ?' என்பதாம்.)

English explanation

'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."